உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 28, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

கடற்படையுடன் இணைந்து மட்டக்களப்பில் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடி வலைகள் பறிமுதல் – நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிப்பு.!!!

(ஜே.கே)

கடற்றொழில் அமைச்சினால் தடை செய்யப்பட்ட சட்டவிரோத பெருமளவு வலைகள் கடற்படையினரின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டதாக மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் என்.ஸ்ரீ ரஞ்சன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவியில் பிள்ளையா ரடி, சத்துருக்கொண்டான், நாவற் காடு ஆகிய இடங்களிலேயே மேற்படி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தங்கூஸ் வலைகள், முக்கூட்டு வலைகள், தொட்டாண்டி  வலைகள் ஆகிய தடை செய்யப்பட்ட வலைகளே இவ்வாறு கடற் படையினரின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட தடை செய்யப்பட்ட சட்டவிரோத வலைகளை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குறித்த வலைகளை அழிக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.தர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட வலைகளின் பெறுமதி சுமார் மூன்று லட்சம் ரூபாய் என திணைக்கள அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 726313

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time