உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

கடற்படையின் விசேட சுற்றிவளைப்பில்: 3 உர மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்ட 78 கிலோக்கும் மேலான ஐஸ் மற்றும் ஹெரோயின் பிடிப்பு.!!!

கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது, பெருமளவான போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது, 03 உர மூட்டைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் போதைப்பொருள் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சோதனை நடவடிக்கையின்போது, 63 கிலோ 718 கிராம் ஐஸ் போதைப்பொருள், 14 கிலோ 802 கிராம் ஹெரோயின் என மொத்தம் 78 கிலோ 520 கிராம் போதைப்பொருள் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

படகின் உரிமையாளர் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் முன்னெடுத்து வருகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 935176

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time