உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

காத்தான்குடியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா.!!!

(எம்.பஹத் ஜுனைட்)

சர்வதேச ரீதியில் டிசம்பர்-03 திகதி கொண்டாடப்படும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் நிகழ்வு காத்தான்குடி பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (23) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம்.இஜாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாறா மெளஜூத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்ததோடு முதன்மை அதிதிகளாக காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர், உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா உட்பட கெளரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.அருள்ராஜ், சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.எம்.ஹாரிஸ் , தொழிலதிபர் எம்.ஐ.எம்.பழீல், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி ராதிகா சுதானந்தன், என்.எம்.எப்.நஜீபா ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் உறுப்பினர்களது திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1075807

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time