ஓமான் வளைகுடாவையும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாக ஈரான் அறிவிப்பு – மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
ஹார்முஸ் நீரிணைக்கு அடுத்தபடியாக மூலோபாய ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஓமான் வளைகுடாவையும் தற்போது தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் அரசு நடத்தும் “தஸ்னிம்” செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியில், ஈரானிய கடற்படைத் தளபதி இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த கடல்வழிப் பாதையில் ஈரானின் ஆதிக்கம் அதிகரிப்பது சர்வதேச சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் போர்க்கப்பல்கள் இந்தப் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு மத்திய கிழக்கில் நிலவும் இராணுவப் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.