உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

ஆசிய அபிவிருத்தி வங்கி சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தில் – காத்தான்குடி இணைப்பு.!!!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் சிறப்பு நிகழ்ச்சி திட்டத்தில் காத்தான்குடி நகரமும் இணைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 8 உள்ளூராட்சி சபைகள் அடங்கிய இந்த திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலா வலையமைப்பில் காத்தான்குடியும் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுவதுடன், சுற்றுலா தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், இவ்வேலைத்திட்டம் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான பூர்வாங்க சாத்தியவள ஆய்வுகள், ஆலோசனைகள் மற்றும் கருத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (30) மட்டக்களப்பு உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் காத்தான்குடி நகர சபையின் நகர முதல்வர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான அபிவிருத்தி பணிப்பாளர், சுற்றுலாத்துறை ஆலோசகர் கலாநிதி சமந்த பத்திரன, பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர், பிரதிப் திட்டமிடல் பணிப்பாளர், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 871326

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time