உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 25, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

கற்பிட்டி பிரதேச சபையில்; தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியது.!!!

தவிசாளர் அப்துல் சத்தார் மொகமட் றிகாஸ்; பிரதி தவிசாளர் சமன் குமார் ஹேரத்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச சபைக்கு 32 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் பெரும்பான்மை உறுப்பினர்களை எந்த கட்சியும் பெற்றுக் கொள்ளாத நிலையில் இன்று திங்கட்கிழமை (16) இடம்பெற்றது.

தவிசாளர் தெரிவு இரகசிய வாக்கெடுப்பா பகிரங்க வாக்கெடுப்பா என உறுப்பினர்களுக்கு இடையில் வாத பிரதி வாதங்கள் இடம்பெற்று அமளி துமளி இடம்பெற்றது இதனை அடுத்து அதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது இதில் 16 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்புக்கும் 15 உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்புக்கும் வாக்களித்தனர் அதன்படி இரகசிய வாக்கெடுப்பு மூலம் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது இதில் 16 உறுப்பினர்களின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தியின் அப்துல் சத்தார் மொகமட் றிகாஸ் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதுடன்

அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் மொஹமட் இப்றாஹீம் மொஹமட் ஆசிக் 15 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று தோல்வியை தழுவினார்.ஒரு உறுப்பினர் அமர்வதற்கு சமூகமளிக்கவில்லை.

உப தவிசாளர் தெரிவும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு இடம்பெற்றது இதில் 32 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் 17 உறுப்பினர்களின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தியின் சமன் குமார ஹேரத் தெரிவு செய்யப்பட்டதுடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட பொது ஜன பெரமுன ஹாரூன் 15 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று தோல்வியை தழுவி கொண்டமை குறிப்பிடத்தக்கது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 719757

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time