போதைப்பொருட்களை விரைவில் அழிக்கும் சட்ட திருத்தங்கள் குறித்து – ஜனாதிபதியுடன் முக்கிய ஆலோசனை.!!!
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்புக்களை விரைவாக அழிக்கும் பணிகளை துரிதப்படுத்துவதற்கான சட்டச் சிக்கல்களை நீக்குவது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில், போதைப்பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பொருட்களை நீண்டகாலம் சேமித்து வைப்பதால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் நிர்வாக சிக்கல்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்டது. அதேவேளை, அவற்றை விரைவாக அழிக்க தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளும் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், தற்போதைய சட்ட நடைமுறைகளில் உள்ள தாமதங்களை குறைத்து, பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான முறையில் போதைப்பொருட்களை அழிக்கும் செயல்முறைகளை உருவாக்குவது குறித்தும் ஆலோசனை நடந்தது.
இந்த முயற்சி, நாட்டில் போதைப்பொருள் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்கான முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.





