உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

மட்டக்களப்பு மாவட்டத்தில் குளங்களை நோக்கி படையெடுக்கும்: பெருமளவிலான வெளிநாட்டு நாரைகள்.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நிலவிவரும் வரட்சியான காலநிலையினால் குளங்கள், வயல்வெளிகளை நோக்கி வெளிநாட்டு நாரைகள் பெருமளவில் படையெடுக்க தொடங்கியுள்ளன.

வற்றி வரும் குளங்களிலும், வயல் வெளிகளிலும் இவ்வாறு பெருமளவிலான நாரைகள் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

இக்காலப் பகுதியில் குறிப்பிட்ட நாரைகள் இனப்பெருக்கத்துக்காக மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி வருவதாக மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நமது நாட்டில் காணப்படும் வெள்ளை கொக்குகளுடன் இணைந்ததாக குறித்த வெளிநாட்டு நாரைகளும் நீர் நிலைகளில் காணப்படுகின்றன.

குறித்த நாரைகள் நீர் நிலைகளில் அதிகளவில் காணப்படுவதால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அவற்றை ரசித்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 720620

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time