உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

மட்டக்களப்பு நகரில் சந்தைகள் மற்றும் ஹோட்டல்களில் பாரிய சுற்றிவளைப்பு – மனித பாவனைக்கு உதவாத பெருமளவு உணவுப்பொருட்கள் மீட்பு.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுச் சந்தைகள், ஹோட்டல்கள், பல. சரக்கு கடைகள், சுப்பர் மார்க்கட்டுகள் மீது சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட பாரிய திடீர் தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பின் போது 13 வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டதுடன் 1 வர்த்தகர் மீது மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ். முரளீஸ்வரனின் பணிப்புரையின் பெயரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமாரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குறித்த தேடுதல் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களும் இத்தேடுதலில் பங்கு கொண்டனர்.

மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த, பழுதடைந்த, காலாவதியான, பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்த, லேபில் காட்சிப் படுத்தாத வர்த்தக நிலையங்களின் வர்த்தக நிலையத்தின் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 5 மணித்தியாலங்கள் வரை இடம்பெற்ற இச்சுற்றிவளைப்பின்போது பெருமளவிலான பழுதடைந்த மனித பாவனைக்கு உதவாத காலாவதியான உணவுப் பொருட்கள் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 934825

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time