உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261123-WA0059
ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கை: போராட்டத்தால் தீர்வா.??? பேச்சுவார்த்தையால் தீர்வா.???
IMG-20261115-WA0011
2027 வரவு–செலவுத் திட்டம்: அபிவிருத்திக்கான புதிய பாதையா? மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா?

Share :

வட கொழும்பின் அபிவிருத்தித் திட்டங்களை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்கள்.!!!

வட கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர ஆகியோர் நேற்று (28) நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

இந்த விசேட கள ஆய்வில் அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

வட கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கால்வாய் சுத்திகரிப்பு, வீடமைப்புத் திட்டங்கள், பிரதான மற்றும் உள்ளக வீதிகள் புனரமைப்பு, கழிவு முகாமைத்துவம், கொள்கலன் முனையங்கள், களனி ஆற்றங்கரையைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், பொதுச் சந்தை அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இதன்போது ஆய்வு செய்யப்பட்டன.

இதன்போது, செபஸ்தியன் தெற்கு கால்வாய்த் திட்டம், மாதம்பிட்டிய கிம்புலா எல அபிவிருத்தித் திட்டம், 472 புதிய வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள கிம்புலா எல வீடமைப்புத் திட்டம், செபஸ்தியன் வடக்கு கால்வாய் அபிவிருத்தி மற்றும் கொழும்பு 14, நாகலகம் வீதியிலுள்ள பொதுச் சந்தை அபிவிருத்தி ஆகியன தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், பெர்குசன் வீதியை அகலப்படுத்துதல், அனுமதியற்ற கட்டடங்களை அகற்றுதல், மீள்குடியேற்றத்திற்கான முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளுதல், மட்டக்குளி களனி ஆற்றின் மில் வீதி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளில் கொள்கலன் முனையமொன்றை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

மட்டக்குளி அலிவத்த உள்ளிட்ட பகுதிகளுக்கான அபிவிருத்தித் திட்டம், ஸ்ரீ விக்கிரம மாவத்தையையும் களனி ஆற்றங்கரையையும் பாதுகாத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அபிவிருத்திப் பணிகள் குறித்தும் அமைச்சர்கள் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

வட கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு வசதிகளையும் பொருளாதார நன்மைகளையும் ஏற்படுத்தும் வகையில், நான்கு முக்கிய துறைகளை அடிப்படையாகக் கொண்டு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அப்பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களின் கல்வி, பொருளாதாரம், மதம் சார்ந்த நிலைமைகள் மற்றும் பிரதேசத்தின் விநியோகப் பாதைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு அபிவிருத்திப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கள ஆய்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எம்.ஜி. ஹேமச்சந்திர, கொழும்பு பெருநகரப் பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தின் பணிப்பாளர் ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க, அதன் வீடமைப்புப் பிரிவுப் பணிப்பாளர் எம்.எச்.ஆர். குமார, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரதீப் மாபலகம உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மேலும், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான எஸ். சுதாகர், நிஹால் பத்திரகே, சுகீ ஹேமச்சந்திர உள்ளிட்ட உள்ளூராட்சி அரசியல்வாதிகள், பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1372225

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time