உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

கனமழையால் பாதிக்கப்பட்ட பாலங்களின் தடைகளை அகற்ற – கடற்படை சுழியோடிகள் தொழில்நுட்ப உதவி.!!!

(கற்பிட்டி நிருபர் – சியாஜ்)

கனமழை காரணமாக மகாவலி ஆற்றின் நீர் மட்டம் உயர்வடைந்த நிலையில், பேராதனை, கெட்டம்பே, தியகபனாதொட்ட மற்றும் லேவெல்ல ஆகிய பாலங்களில் சிக்கியிருந்த தடைகளை அகற்ற இலங்கை கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த பாலங்கள் வழியாக நீர் ஒழுங்காக வெளியேறுவதற்கு இடையூறாக இருந்த பெரிய மரக்கட்டைகள், விறகுகள், மூங்கில் புதர்கள் உள்ளிட்ட குப்பைகள் வெள்ளிக்கிழமை (19) கடற்படை சுழியோடிகளின் தொழில்நுட்ப உதவியுடன் அகற்றப்பட்டன. இந்த நடவடிக்கை சாலை மேம்பாட்டு அதிகாரசபையின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறிப்பாக கெட்டம்பே பகுதியில் உள்ள தியகபனாதொட்ட மற்றும் லேவெல்ல பாலங்களில் நீர் வடிகாலுக்கு பெரும் தடையாக இருந்த மரக்கட்டைகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டதன் மூலம், மகாவலி ஆற்றின் நீர் சீராகப் பாயும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் நோக்கில் கடற்படையால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டத்தின் கீழ், பொது இடங்கள், வீடுகள் மற்றும் குடிநீர் கிணறுகள் சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் படி, 2025 டிசம்பர் 20 வரை கடற்படையின் பங்களிப்புடன் 1,111 குடிநீர் கிணறுகள், 108 பொது இடங்கள் மற்றும் 83 வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகளுக்கு கடற்படை தொடர்ந்து பங்களித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 702998

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time