உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

கல்வி மறுசீரமைப்பில் சிக்கல்களை தீர்க்க புதிய சட்டப் பொறிமுறை – ஜனாதிபதி அறிவிப்பு.!!!

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தும் போது உருவாகியுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வி நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய தரப்பினர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில், முறையான சட்டக் கட்டமைப்புடன் கூடிய ஒரு பொறிமுறையை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இன்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துடன் (FUTA) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கலந்துரையாடலின் போது, தற்போதுள்ள சட்டத் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில், தேசிய கல்வி நிறுவகத்தை மையமாகக் கொண்ட கட்டமைப்பின் மூலம் கல்வி மறுசீரமைப்புகளை செயல்படுத்துவதில் எதிர்கொள்ளப்படும் சிக்கல்களை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டினர்.

அதேவேளை, புதிய கல்வி மறுசீரமைப்புகளின் அவசியத்தை தமது சங்கம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த FUTA, நகர்ப்புற பாடசாலைகளில் உள்ள மாணவர்களைவிட, கிராமப்புற பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு இத்தகைய கல்வி மறுசீரமைப்புகள் அதிகம் தேவைப்படுவதாகவும் வலியுறுத்தினர்.

கல்வி மறுசீரமைப்புகள் சமூகநீதியை உறுதிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் எனவும் ஜனாதிபதி இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703531

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time