மருத்துவ பரிசோதனைக்காக சட்டவைத்திய அதிகாரியிடம் அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளையான்.!!!
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், இன்று (02) மருத்துவ பரிசோதனைக்காக சட்டவைத்திய அதிகாரியிடம் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
2006ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தல் சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறி அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனுடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடனும் அவருக்கு தொடர்பு உள்ளதா என்பதையும் கண்டறியும் நோக்கில் பாதுகாப்பு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

