உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

பொருட்கள் தட்டுப்பாடு இல்லை: அதிகளவில் கொள்வனவு செய்ய வேண்டாம் – நுகர்வோர் அதிகார சபை.!!!

பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் அத்தியாவசியப் பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்ய வேண்டாம் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் பொருட்கள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை என்றும், தேவையான பொருட்கள் போதுமான அளவில் கிடைக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை என இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கொள்கலன்களை பரிசோதிக்கும் இடவசதி குறைவாக இருப்பதாலேயே சில நேரங்களில் சிறிய தாமதங்கள் ஏற்படுகின்றன என்றும், தற்போது அந்த இடவசதிகளை விரிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் தேவைக்கேற்ற அளவில் மட்டுமே பொருட்களை கொள்வனவு செய்யுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 805451

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time