உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

மட்டக்களப்பு சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகருக்கு பதவி உயர்வு – வாரியபொல சிறைச்சாலைக்கு இடமாற்றம்.!!!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உதவி சிறைச்சாலை அத்தியட்சகராக கடமை புரிந்துவந்த நல்லையா பிரபாகரன் அவர்கள், அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்று வாரியபொல சிறைச்சாலைக்கு நாளை முதல் இடமாற்றம் பெற்று செல்கிறார்.

இதனை முன்னிட்டு, மட்டக்களப்பு சிறைச்சாலையில் அவரை கௌரவிக்கும் வகையில் பல்வேறு பிரியாவிடை வைபவங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

உதவி அத்தியட்சகராக பணியாற்றிய காலப்பகுதியில், ஊடகவியலாளர்களுடன் மிகுந்த நெருக்கமான தொடர்புகளையும் நல்லிணக்கமான அணுகுமுறையையும் பேணியமைக்கு பாராட்டாக, ஊடகவியலாளர்கள் சார்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் உபதலைவர் ரீ.எல். ஜவ்பர்கான் அவர்கள், பொன்னாடை போர்த்தி அவரை கௌரவித்தார்.

இந்த நிகழ்வில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, பதவி உயர்வு பெற்றுச் செல்லும் அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 809938

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time