பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை துறைகளுக்கு 7,500 புதிய உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பு.!!!
பொலிஸ் திணைக்களம் மற்றும் விசேட அதிரடிப்படை (STF) ஆகியவற்றில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் 7,500 புதிய ஆரம்பநிலை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்ய அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி ஆரம்பநிலை பொலிஸ் கான்ஸ்டபிள்கள், விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள்கள், உப பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் (சாரதிகள்) ஆகிய பதவிகளுக்காக இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை www.police.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று, அதிலுள்ள “Join Us” என்ற தெரிவின் மூலம் அல்லது வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து ஒன்லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதி 2026 மே மாதம் 8 ஆம் திகதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து ஏதேனும் சந்தேகங்கள் அல்லது மேலதிக தகவல்களைப் பெற விரும்புவோர் பொலிஸ் ஆட்சேர்ப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியை 071-8591925, 011-2505202 அல்லது 011-2552953 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.