கம்பளை பிரதேசத்தில்; நிவாரணமும் துப்பரவும் – ஹாதிக் இப்றாஹீம் தலைமையில் முன்னெடுப்பு.!!!
(முபாறக் அஸ்லம்)
கம்பளை பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் ஹாதிக் இப்றாஹீம் தலைமையில் நிவாரண உதவிகளும் துப்பரவு பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
அவரது சொந்த நிதியின் உதவியுடன், சம்மாந்துறை STR இளைஞர் அணி நண்பர்கள் கம்பளை பிரதேசத்திற்கு சென்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
மேலும், நீர் வடியத் தொடங்கிய பகுதிகளில் ஏற்படும் சுகாதார அபாயங்களைத் தடுக்கும் வகையில், துப்பரவு பணிகளிலும் தன்னார்வமாக ஈடுபட்டு, சுற்றுச்சூழல் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த மனிதாபிமான முயற்சி, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடையே நம்பிக்கையும் ஆறுதலையும் ஏற்படுத்தியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.















