உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைத்துறை அபிவிருத்திக்கு – 1300 மில்லியன் ஒதுக்கீடு.!!!

(ஜே.கே)

விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்த்தில் கால்நடைத்துறை அபிவிருத்திக்காக 1300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய,கால்நடை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம்.அஸ்மி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த பண்ணையாளர்களுக்கான பணப்பரிசில்கள் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்கள பிரதி பணிப்பாளர் டாக்டர் எம்.அப்துல் ஹாதி தலைமையில் நடைபெற்றது.மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 60 பண்ணையாளர்கள் பணப்பரிசில்களையும், சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.

கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்கள கிழக்கு மாகாண பணிப்பாளர் சுல்பிகார் அபூபக்கர், திணைக்களத்தின் கிழக்கு மாகாண திட்டங்களுக்கான நிபுணர் டாக்டர் மாஹிர் உட்பட அதிகாரிகள், பண்ணையாளர்களும் கலந்து கொண்டனர்.

மாடு, ஆடு, கோழி, புல் வளர்ப்பு பண்ணையாளர்களிடையே குறித்த போட்டி நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 809936

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time