உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

அனர்த்தத்தால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை முதல் மீளத் திறப்பு — கல்வி அமைச்சு அறிவிப்பு.!!!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை (16) முதல் மீளத் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, பாடசாலைகள் மீள ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இன்று (15) பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேல், வடக்கு, கிழக்கு, சபரகமுவ, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் உள்ள மொத்தம் 10,076 பாடசாலைகளில் 9,929 பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார்.

அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள 147 பாடசாலைகள் நாளை மீளத் திறக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, ஊவா மாகாணத்தில் – 26 பாடசாலைகள், வடமேல் மாகாணத்தில் – 6 பாடசாலைகள், மத்திய மாகாணத்தில் – 115 பாடசாலைகள் நாளை ஆரம்பிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் சீருடை அணிவது தொடர்பில் தளர்வான கொள்கை பின்பற்றப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703003

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time