உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய – பிரதான குற்றவாளி உட்பட 6 பேர் கைது.!!!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த நவம்பர் 30 ஆம் திகதி நபரொருவர் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், நேற்று (01) சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் தெல்லிப்பழை பகுதிகளைச் சேர்ந்த 23 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இந்தக் குற்றத்தைச் செய்த பிரதான சந்தேகநபர் மற்றும் அவருக்கு உதவிய மேலும் 05 சந்தேக நபர்கள் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஒரு வேன், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் குற்றத்தைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட 03 கையடக்கத் தொலைபேசிகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 935182

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time