உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 17, 2026

Hot News

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு: ஐஸ், ஹெரோயினுடன் இரு சந்தேகநபர்கள் கைது.!!!

-பாறுக் ஷிஹான்-

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை கடத்தி விநியோகித்த சந்தேக நபர்களை அக்கரைப்பற்று (தம்பட்டை)  விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று இரவு அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பின் போது வீடொன்றில் வைத்து குறித்த இரு சந்தேக நபர்கள்   போதைப்பொருட்களுடன் கைதாகினர்.

இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏலவே குறித்த போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் இப்பகுதியில் மிக நீண்ட காலமாக  போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பதுடன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்  கைதானவர்கள் 30 மற்றும் 50 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் 40 கிராம் ஐஸ் மற்றும்  60 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைத்தொலைபேசிகள் என்பன சந்தேக நபர்கள் வசம் இருந்து விசேட அதிரடிப்படையினர் மீட்டு சட்ட நடவடிக்கைக்கா நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 817945

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time