உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

ஆசிய சுற்றுலா தரவரிசையில் இலங்கை புதிய மைல்கல் – 5வது இடம்.!!!

அமெரிக்காவின் புகழ்பெற்ற “U.S. News & World Report” வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின் படி, 2026 ஆம் ஆண்டில் ஆசியாவில் சுற்றுலா செல்வதற்குச் சிறந்த இடங்களின் பட்டியலில் இலங்கை 5-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த தரவரிசையில் ஜப்பானின் புஜி மலை முதலிடத்தையும், அதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸின் பலவான், ஜப்பானின் டோக்கியோ, தென் கொரியாவின் சியோல் ஆகியவை முன்னணி இடங்களையும் பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலானது சுற்றுலா தலங்களை அணுகுவதற்கான வசதி, உள்ளூர் செலவுகள் மற்றும் விலைகள், சுற்றுலா ஈர்ப்புகள், கலாச்சாரம், சுற்றுலாப் பயணிகளின் விருப்பம் ளோன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது

இலங்கை குறித்து “இந்தியாவின் தெற்கு முனையில் அமைந்துள்ள தீவு நாடான இலங்கை, மழைக்காடுகள், அழகிய கடற்கரைகள் மற்றும் பண்டைய இடிபாடுகளை கொண்டுள்ளது. மேலும் பல பிரபலமான ஆசிய சுற்றுலா தலங்களில் காணப்படும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் நெரிசல் இன்றி, அமைதியான அனுபவத்தை வழங்கும் நாடாக இலங்கை திகழ்கிறது.” அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் 26 தேசிய பூங்காக்கள் உள்ளன யானைகள், சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகளை காணும் சபாரி பயணங்களுக்கு ஏற்ற இடங்கள், 600 அடி உயர சிகிரியா கோட்டை, பொலன்னறுவையின் விகாரைகள், கோயில்கள் போன்ற பண்டைய பாரம்பரிய தலங்கள், தென்னை மரங்களால் சூழப்பட்ட பொன்னிறக் கடற்கரைகள் – அமைதியான விடுமுறையை நாடுபவர்களுக்கு சிறந்த தேர்வு மிக்க இடமாகவும் குறிப்பிட்டுள்ளது.

2026 – ஆசியாவில் சுற்றுலா செல்லச் சிறந்த 20 இடங்களாக புஜி மலை – ஜப்பான், டோக்கியோ – ஜப்பான், பலவான் – பிலிப்பைன்ஸ், சியோல் – தென் கொரியா, இலங்கை, சியாங் மாய் – தாய்லாந்து, பூட்டான், ஹனோய் – வியட்நாம், பாலி – இந்தோனேசியா, புக்கெட் – தாய்லாந்து, கியோட்டோ – ஜப்பான், சீயம் ரீப், ஒசாகா – ஜப்பான், கோலாலம்பூர் – மலேசியா, ஹொங்கொங், மாலைத்தீவு, சிங்கப்பூர், ஜெய்ப்பூர் – இந்தியா, லென்காவி – மலேசியா, ஆக்ரா – இந்தியா உள்ளடங்கியுள்ளன.

சுற்றுலா துறையில் இலங்கையின் மீள் எழுச்சியை உறுதிப்படுத்தும் இந்த அங்கீகாரம், நாட்டின் பொருளாதாரத்திற்கும் உலகளாவிய புகழுக்கும் மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 702984

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time