உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 25, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

இலங்கை – ஜெர்மன் பொதுவான பொருளாதார சவால்கள் தொடர்பாக; விசேட கவனம்.!!!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மனி பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனை (Reem Alabali-Radovan) சந்தித்து கலந்துரையாடினார்.

உலகளாவிய புதிய பொருளாதாரப் மாற்றங்களின்போது இரு நாடுகளும் எதிர்நோக்கும் பொதுவான சவால்கள் தொடர்பாக இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தக் கூடிய துறைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் நீண்ட வரலாற்றை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இலங்கை ஜெர்மனி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (Ceylon German Technical Training Institute (CGTTI) ) போன்ற தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கும் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளின் முன்னேற்றத்திற்காகவும் ஜெர்மனி வழங்கும் பங்களிப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

அந்தப் பங்களிப்புகள் மற்றும் ஆர்வத்தையும் எதிர்காலத்தில் பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையில் மேம்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 719755

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time