உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

தொழில்சார் கல்வி வலுப்படுத்தல்: நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு குறித்து பிரதமர் தலைமையில் சிறப்பு கலந்துரையாடல்.!!!

இம்முறைக்கான வரவுசெலவுத் திட்டத்தில் தொழில்சார் கல்வியை மேம்படுத்துவதற்காக கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் பயன்கள் மாணவர்களுக்கு அதிகபட்சம் சென்றடையத் தொழில்சார் கல்வி நிறுவனங்கள் தமது பொறுப்பை முறையாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அனர்த்த நிலைமையால் சேதமடைந்துள்ள தொழிற்பயிற்சி மையங்களை அவசரகாலத்தில் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை விரைவில் மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

அனர்த்தத்திற்குப் பின்னர் தொழில்சார் கல்வி முறைமையை வழமை நிலைக்கு கொண்டுவரும் திட்டங்கள், கல்விச் சீர்திருத்தத்துடன் இணைந்து தொழில்துறை திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் டிசம்பர் 10ஆம் திகதி நாராஹேன்பிட்டி நிபுணத்தா பியசவில் அமைந்த தொழில் கல்விப் பிரிவில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதமர் ஹரிணி அவர்கள் மற்றும் சூரிய அவர்கள் பங்கேற்று, தொழில்சார் கல்வி கட்டமைப்பை விரைவில் மேம்படுத்துவதற்கான முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703008

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time