உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான குழு – மூதூரில் நிவாரண மற்றும் களப்பணி.!!! 

(எம்.ரி.எம்.யூனுஸ்)

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மூதூர் பகுதிக்கு இரண்டு நாட்கள் களப்பணிக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான குழு, இன்று (06) பயணம் மேற்கொண்டுள்ளது.

இதில் காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் காத்தான்குடி நகர சபையின் கௌரவ உறுப்பினர்கள், சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் அனர்த்த முகாமைத்துவ குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த பயணம் மூதூர் மக்களுக்கு நிவாரணம் வழங்கல் மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். மூதூர் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சுத்தமான குடிநீரை உறுதிப்படுத்தும் நோக்கில் அசுத்தமடைந்த கிணறுகளை துப்பரவு செய்வதற்காகவும், மக்களுக்கு வழங்கப்படவிருக்கும் நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகள் வழங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவே இந்த குழு சென்றுள்ளது.

நிவாரண பணிகளுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைத்து, மக்களுக்கு சுகாதாரமான சூழலை ஏற்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பயணத்தில், சமூக மேம்பாட்டுக்கான மக்களின் ஒன்றியமும், உள்ளூர் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மூதூர் மக்களுக்கு சிறந்த சேவை மற்றும் உதவி வழங்கும் நோக்கத்தில் செயல்படுவதை உறுதிசெய்கிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 809925

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time