உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

10 கிலோ 400 கிராம் கஞ்சாவுடன்: மூவர் கைது.!!!

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி ஆனவாசல் பகுதியில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ஆறு பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ 400 கிராம் கஞ்சாவை கற்பிட்டி பொலிஸார் கைப்பற்றியதுடன், மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜேலால் தலைமையிலான நான்கு பேர் அடங்கிய விசேட பொலிஸ் குழுவினர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

அதன்போது சந்தேக நபர்கள் வைத்திருந்ததாகக் கூறப்படும் ஆறு பொதிகளில் அடுக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ 400 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 806030

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time