உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

24 லட்சம் ரூபாய் பெறுமதியான: ஐஸ் மற்றும் ஹீரோயினுடன் – மட்டக்களப்பில் இரு போதை வியாபாரிகள் கைது.!!!

(ஜே.கே)

சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹீரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களுடன் இரண்டு போதை பொருள் வர்த்தகர்கள் காத்தான்குடி பொலிசாரினால் நேற்றிரவு (05) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 100 கிராம் ஐஸ் மற்றும் 10 கிராம் ஹிரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன

கொழும்பிலிருந்து போதை பொருட்களை கடத்தி வந்து கல்லடியில் உள்ள விடுதியொன்றில் வைத்து விற்பனை செய்து வரும் குறித்த நபர்கள் பிரபல போதை வியாபாரிகள் என தெரிவிக்கப்படுகிறது

கல்லடியிலிருந்து சம்மாந்துறைக்கு குறித்த போதைப் பொருட்களை எடுத்துச் சென்ற நிலையில் பொலிசாரினால் இவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்

போதைப் பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது

குறித்த நபர்கள் 26 மற்றும் 29 வயதுடைய நபர்கள் என தெரிவித்த பொலிசார் வாழைச்சேனையை சேர்ந்தவர்கள் எனவும் மேலும் தெரிவித்தனர்

சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிசார் கொண்டுள்ளது மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 805906

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time