டித்வா புயல் தாக்கம்: 6,164 வீடுகள் முழுமையாக சேதம்; உயிரிழப்பு 643 ஆக உயர்வு – 1.36 மில்லியன் மக்கள் பாதிப்பு.!!!
டித்வா புயல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 6,164 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (14) காலை வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், மேலும் 112,110 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
மண்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளதாகவும், இதுவரை 184 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 23,041 குடும்பங்களைச் சேர்ந்த 72,911 பேர், தற்போது 796 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், டித்வா புயல் தாக்கம் காரணமாக 391,401 குடும்பங்களைச் சேர்ந்த 1,364,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.