உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 27, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

ஓட்டமாவடி சாவன்னா சந்தியில் வீதி சமிக்கை விளக்கு அமைக்க அவசர கோரிக்கை – ஹிஸ்புல்லாஹ் எம்பி.!!!

மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட ஒருங்கிணப்புக்குழுக்கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தியமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (27) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன் இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோரது பங்கேற்புடன் இக்கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் முன்னேற்ற மீளாய்வு செய்யப்பட்டதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழிவின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான முன்மொழிவுகள் குறித்தும் விரிவாக கலந்துயாடப்பட்டது.

2026 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2177 திட்டங்களுக்கு 11938 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பல்வேறு முன்மொழிவுகளை முன்வைத்தார்.

குறிப்பாக, ஓட்டமாவடி சாவன்னா சந்தியில் வீதி சமிக்கை விளக்கு உடனடியாக அமைக்கப்பட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் இது தொடர்பான மதிப்பீடுகள் செய்யப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வீ. நவநீதன், உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள், செயலாளர்கள், அமைச்சின் உயரதிகாரிகள், முப்படை உயரதிகாரிகள் ஏனைய திணைக்களங்களின் உயரதிகாரிகள், திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 724559

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time