உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க வங்கிகள் இலக்கு ஆகலாம்: ஈரான் கடும் எச்சரிக்கை.!!!

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியங்களில் செயல்படும் அமெரிக்க வங்கிகளுக்கு எதிராக தாக்குதல்களை விரிவுபடுத்தக் கூடும் என ஈரான் புரட்சிகர இராணுவ பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து ஈரானின் வங்கி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை மேற்கொண்டால், அதற்குப் பதிலடியாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க வங்கி கிளைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ஈரானிய வங்கி கட்டிடங்களுக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல்களால் நாட்டின் வங்கிச் செயல்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டதுடன், பல இடங்களில் சேவைகள் தற்காலிகமாக ஸ்தம்பிதமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க வங்கி கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல்களை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்தரப்பினர் மீண்டும் இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்ள முயன்றால், வளைகுடா நாடுகளில் செயல்படும் அனைத்து அமெரிக்க வங்கி கிளைகளும் ஈரானின் சட்டபூர்வமான இலக்குகளாக மாறும் என ஈரான் புரட்சிகர இராணுவ பாதுகாப்புப் படை மேலும் எச்சரித்துள்ளது.

அண்மையில் ஈரானின் பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான செபா வங்கி கட்டிடம் மற்றும் மற்றொரு வங்கி கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல ஊழியர்கள் உயிரிழந்ததுடன், வங்கி நடவடிக்கைகள் பல மணிநேரங்களுக்கு தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703853

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time