உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழம்; 11 வயது சிறுவன் உயிரிழப்பு.!!!

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில், பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உட்கொண்ட 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த ரொ. சஞ்சீவ் என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினமான நேற்று மாலை, சிறுவனின் வீட்டுக்கு முன்னால் இருந்த நாவல் மரத்திலிருந்து நிலத்தில் விழுந்து கிடந்த நாவல் பழத்தை சிறுவன் எடுத்து உட்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே சிறுவன் மயங்கி விழுந்ததாகவும், உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் உட்கொண்ட நாவல் பழத்தில் பாம்பின் விஷம் பட்டிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், மரணத்திற்கான உறுதியான காரணத்தை கண்டறிய சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215580

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time