உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

360000 மில்லி லீற்றர் கோடா, 38000 மில்லி லீற்றர் கசிப்புடன்; 12 பேர் காத்தான்குடி பொலிசாரினால் கைது.!!!

(ஜே.கே)

சுமார் 360000 மில்லி லீற்றர் கோடா, 38000 மில்லி லீற்றர் கசிப்பு போதைப் பொருட்களுடன் 12 பேர் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்டட்பட்ட ஆரையம்பதி, தாளங்குடா, புதுக்குடியிருப்பு ,கிரான்குளம், நாவற்குடா, கல்லடி உட்பட்ட பல பிரதேசங்களில் பொலிசார் நடாத்திய திடீர் சுற்றி வளைப்புகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து சுமார் 360000 மில்லி லீற்றர் கோடாவுடன், 38000 மில்லி லீற்றர் கசிப்பு பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1065472

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time