உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 26, 2026

Hot News

IMG-20261123-WA0059
ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கை: போராட்டத்தால் தீர்வா.??? பேச்சுவார்த்தையால் தீர்வா.???
IMG-20261115-WA0011
2027 வரவு–செலவுத் திட்டம்: அபிவிருத்திக்கான புதிய பாதையா? மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா?

Share :

ஐந்து மாதங்களாகக் காணாமல் போன 15 வயது சிறுமி, இரண்டு மாதக் குழந்தையுடன் மீட்பு – 23 வயது இளைஞர் உள்ளிட்ட இருவர் கைது.!!!

இலங்கையின் நக்கிள்ஸ் மலைத்தொடர் வனப்பகுதியில், கடந்த ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி, இரண்டு மாதப் பெண் குழந்தையுடன் குகையொன்றிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுதும்பர பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளைத் தொடர்ந்து, மீமுரே பகுதிக்கு அண்மையிலுள்ள மக்கள் நடமாட்டமற்ற வனப்பகுதியில் குறித்த சிறுமியும் குழந்தையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

சிறுமி காணாமல் போனமை தொடர்பில் அவரது குடும்பத்தினர் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில், இளைஞர் ஒருவர் உள்ளூர் கடையொன்றில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு அரிசி மற்றும் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதை பொலிஸார் அவதானித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் அவரைப் பின்தொடர்ந்து சென்றபோது, தொலைதூர வனப்பகுதியில் பிளாஸ்டிக் தாள்களால் மூடப்பட்டிருந்த குகையொன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தக் குகைக்குள் காணாமல் போயிருந்த சிறுமியும் அவரது இரண்டு மாதப் பெண் குழந்தையும் இருந்துள்ளனர். விசாரணைகளின்படி, எவ்வித மருத்துவ உதவியுமின்றி சிறுமி அந்தக் குகையிலேயே குழந்தையைப் பிரசவித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மேலும், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதற்கு கித்துள் தொழிலில் பயன்படுத்தப்படும் கூர்மையான கருவியொன்று உபயோகிக்கப்பட்டுள்ளதாகவும், தாயும் குழந்தையும் வனப்பகுதியில் சேகரிக்கப்பட்ட மூலிகைகளைக் கொண்டு பராமரிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குழந்தையின் தந்தை எனச் சந்தேகிக்கப்படும் 23 வயது இளைஞர், கித்துள் பாணி தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பெரிய பாத்திரத்தைக் கொண்டு குழந்தையைக் குளிப்பாட்டியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த 23 வயது இளைஞரும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் உறவினர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், மீட்கப்பட்ட சிறுமியும் அவரது குழந்தையும் பொலிஸாரின் பாதுகாப்புடன் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுமியின் பாதுகாப்பு, குழந்தையின் உடல்நிலை மற்றும் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1361562

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time