உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 26, 2026

Hot News

IMG-20261123-WA0059
ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கை: போராட்டத்தால் தீர்வா.??? பேச்சுவார்த்தையால் தீர்வா.???
IMG-20261115-WA0011
2027 வரவு–செலவுத் திட்டம்: அபிவிருத்திக்கான புதிய பாதையா? மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா?

Share :

இலங்கைப் பொலிஸாரின் தொழில்சார் திறனை மேம்படுத்த சீனா உதவி; இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து.!!!

இலங்கைப் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்துவதற்கும், பொலிஸ் திணைக்களத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்துவதற்கும் சீனா உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.

இதற்கான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (24) பொலிஸ் தலைமையகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் புதிய மற்றும் சிக்கலான குற்றச் செயல்களைக் கண்டறிவதற்கும், அவற்றுக்கு எதிராகச் சட்டத்தைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கைப் பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஆற்றலை மேம்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

அத்துடன், பொலிஸ் திணைக்களத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்துவதற்கும், தொழில்நுட்ப ரீதியான மேம்பாடுகளை ஏற்படுத்துவதற்கும் இந்த ஒத்துழைப்பு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, பொலிஸ் நிர்வாகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன உள்ளிட்ட இலங்கைப் பொலிஸின் சிரேஷ்ட அதிகாரிகளும், சீனத் தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1361821

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time