கல்விச் சுற்றுலா சென்ற 16 வயது மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!!!
சமனலவெவ பகுதிக்கு கல்விச் சுற்றுலா சென்ற 16 வயது மாணவன் ஒருவர் நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்குச் சென்ற பின்னர் குறகல புனித ஸ்தலத்திற்குச் சென்ற மொனராகலை பகுதியைச் சேர்ந்த மாணவர் குழுவில் இடம்பெற்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, குறித்த மாணவர் குழு சமனலவெவ அணைக்கு அருகில் பேருந்தை நிறுத்தியிருந்தபோது, பேருந்துகளில் ஒன்றிலிருந்த மூன்று மாணவர்கள் அருகிலுள்ள நீர்த்தேக்கப் பகுதிக்கு குளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.
இதன்போது, பிபிலை – கிரியன்கும்புர பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவன் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், நீரில் மூழ்கி காணாமல் போன மாணவனின் சடலம் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.