உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 14, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி; மீனவர்களால் உயிருடன் மீட்பு.!!!

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயதுடைய யுவதியொருவர், அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (13) இரவு சுமார் 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின்போது, குறித்த யுவதி தனது உடைமைகளைப் பாலத்தின் மீது விட்டுவிட்டு வாவியில் குதித்துள்ளார். இதன்போது, வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் யுவதி நீரில் விழுந்ததைக் கண்டு உடனடியாகச் செயற்பட்டு அவரை மீட்டு கரைக்குக் கொண்டுவந்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸாரின் உதவியுடன் 1990 அவசர அம்புலன்ஸ் சேவை மூலம் யுவதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி வேறொரு பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பான காரணங்களைக் கண்டறிவதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1229934

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time