உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

சட்டவிரோத விற்பனைக்கு முயன்ற 2,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 47 வயது நபர் கைது.!!!

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கொழும்பு துறைமுகத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற சுமார் 2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 47 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படை மற்றும் கொழும்பு துறைமுக காவல்துறையினர் இணைந்து திங்கட்கிழமை (16) மேற்கொண்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றது.

மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் செயல்படும் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனம் மற்றும் கொழும்பு துறைமுக காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையில், துறைமுகப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அதன்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்றிருந்த சுமார் 2,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர் பாதுக்க பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரும் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளும் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700912

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time