உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

வெளிப்புற சவால்களில் இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்த: பொருளாதாரக் கண்காணிப்புக் குழு கூட்டம்.!!!

வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், பிரஜைகளின் நலனை உறுதி செய்வதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்மொழிவுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள பொருளாதாரக் கண்காணிப்புக் குழு, நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழில் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையிலான இந்தக் குழுவில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்)  ரசல் அபொன்சு  செயலாளராகவும் அழைப்பாளராகவும் செயற்படுகிறார்.

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, திறைசேரிச் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களான ஹான்ஸ் விஜயசூரிய மற்றும் துமிந்த ஹுலங்கமுவ , கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை  அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்  திலகா ஜயசுந்தர ,  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா,  லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர்  சன்ன குணவர்தன, இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தலைவர் மங்கள விஜேசிங்க , வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஹனீப் யூசுப், இலங்கை தேயிலை சபையின்   தலைவர்  ஆர்.கே. ஒபேசேகர, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம்,  வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் மேலதிக செயலாளர் (பொருளாதார விவகாரங்கள்) உள்ளிட்டோர் இக்குழுவின் உறுப்பினர்களாக செயற்படுகின்றனர்.

தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார ஸ்திரமற்ற தன்மையால், இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய  மோசமான பாதிப்புகள் மற்றும் அந்த நிலைமையில் சந்தை நிலைமையை ஸ்தீரப்படுத்தல் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கை  குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

ஒரு சிறிய திறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற ரீதியில், வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் மற்றும் அந்த வலய நாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகள்  மற்றும் முதலீடு என்பவற்றிலே  எரிபொருள் இறக்குமதி  தங்கியுள்ளது.  அதனால்  இலங்கைக்கு வெளிப்புற பொருளாதார அதிர்வுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் எச்சரிக்கை  மற்றும் அவற்றை  தொடர்ச்சியாக கண்காணித்து மேற்கொள்ள வேண்டிய முக்கியமான   கொள்கை ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன் போது ஆராயப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 806095

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time