2025 வரவு செலவுத் திட்டம் விஷேட முன்மொழிவுகள்; ஒரே பார்வையில்.!!!
• அஸ்வெசும மற்றும் ஏனைய நலன்புரி சேவைகளுக்காக ஜூலை மாதத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
• வறுமையை போக்குவதற்கு விஷேட வேலைத்திட்டங்கள்.
• புதிய தேசிய தீர்வை வரி முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு திட்டம்.
• புதிய சுங்க சட்டத்தை முன்வைப்பதற்து நடவடிக்கை.
• வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு அரச காணிகள் முதலீடுகளுக்காக குத்தகைக்கு வழங்கப்படும்.
• அரச & தனியார் கூட்டாண்மைக்கு புதிய சட்டம்.
• தேசிய தர முகாமைத்துவ கட்டமைப்புக்காக 750 மில்லியன் ரூபாய் ஒடுக்கீடு.
• கொழும்பு துறைமுகத்தின் வடக்கு – மேற்கு முனைய அபிவிருத்திகளுக்காக 01 மாதத்துக்குள் யோசைனைகள் கோரப்படும்.
• பல்நோக்கு பொருள் விநியோக மத்திய நிலையமாக வெயாங்கொடையில் உள்ளக கொள்கலன் முனையம் நிர்மாணிக்கப்படும்.
• துறைமுக அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.
• கொழும்பு துறைமுகம் – பண்டாரநாயக்க சர்வசே விமான நிலையத்தில் உயர்தர ஸ்கேன் கட்டமைப்பை உருவாக்க 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
• விரைவில் இலத்திரனியல் அடையாள அட்டை.
• விரைவில் இலத்திரனியல் பொருளாதார அதிகார சபை ஒன்று உருவாக்கப்படும்.
• கட்டம் கட்டமாக நாணயத்தாள் பாவனையை குறைப்பதற்கு திட்டம்.
• தொடர்பாடல் தொழிநுட்பத்தினூடான வருடாந்த ஏற்றுமதி வருமானத்தை 5 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்படும்.
• டிஜிட்டல் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
• சுற்றுலாதுறை உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.
• சுற்றுலாத்துறை சார்ந்த இடங்களுக்கு புதிய டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்படும்.
• ஜப்பான் நிதியுதவியுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 02 வது முனையம் விரைவில் நிர்மாணிக்கப்படும்.
• அரச அபிவிருத்தி வங்கி (Development Bank) உருவாக்கப்படும்.
• பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய காப்புறுதி 250,000 ரூபாவால் குறைப்பு.
• எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் சகல அதிசொகுசு வாகனங்களும் குத்தகைக்கு.
• பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனம் இறக்குமதி செய்தல் மற்றும் வாகன இறக்குமதிக்கு அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு நீதி ஒதுக்கீடு எதுவும் இல்லை.
• திரிபோசா வேலைத்திட்டத்துக்காக 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
• மகளிர் , சிறுவர் துஷ்பிரயோகம், மகளிர் திறன் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்காக 120 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
• மகளிர் அபிவிருத்திக்கான கிளைகளை மேம்படுத்த 720 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
• பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளுக்காக மனிதவளம், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் அரசாங்கத்தினால் வழங்கப்படும்.
• சுகாதார சேவைக்கான நிதி 604 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு.
• லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக சர்வதேச தரம் கொண்ட சிகிச்சை நிலையமொன்றை நிறுவுவதற்கு 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
• பாடசாலை உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்திக்காக 1,000 மில்லியன் ரூபாய் வரையில் நிதி ஒதுக்கீடு.
• பல்கலைக்கழக கட்டமைப்பு அபிவிருத்திக்காக 135 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
• பாலர் பாடசாலை மாணவர்களுக்காக காலை உணவுக்கான வேலைத்திட்டத்துக்கான ஒதுக்கீடு 60 ரூபாவிலிருந்து 100 ரூபாவாக அதிகரிப்பு – 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
• பாடசாலை கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்து புதிய நிலையை உருவாக்கும் தேசிய வேலைத் திட்டத்துக்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
• புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான மாணவர் உதவி தொகை 750 ரூபாவிலிருந்து 1,500 ரூபாவாக அதிகரிப்பு- 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
• விளையாட்டு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த போசணை கொடுப்பனவு 5,000 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிப்பு.
• தொழில் பயிற்சி கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை 4,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவாக அதிகரிப்பு – 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
• பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல உதவி தொகையை 5000 ரூபாவிலிருந்து 7500 ரூபாவாக அதிகரிப்பு – பல்கலை. மாணவர்களின் மாணவர் உதவி தொகை 4,000 ரூபாவிலிருந்து 6,500 ரூபாவாக அதிகரிப்பு. (4,600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு)
• உயர்தரப் பரீட்சையின் அதிசித்தியை பெறும் மாணவர்கள் வெளிநாட்டு படிப்பு மற்றும் வினைத்திறன் விருத்தி வேலைத்திட்டத்துக்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
• மேல், வட மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களில் விஷேட விளையாட்டு துறை அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
• யாழ்ப்பாணம் நூலகத்துக்கு தொழிநுட்பம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு- ஏனைய பகுதிகளிலுள்ள நூலகங்களுக்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
• திருத்தப்பட்ட புதிய மின்சாரச் சட்டம் விரைவில்.
• திருகோணமலையிலுள்ள 66 எண்ணெய் தாங்கிகளை சர்வதேச நிறுனங்களுடன் ஒன்றிணைந்து அபிவிருத்தி செய்யத் திட்டம்.
• விவசாயிகளுக்கான உர மானியத்துக்கான ஒதுக்கீடு 35,000 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு .
• 2024 / 2025 ஆம் ஆண்டு பெரும்போக நெல்லை கொள்வனவு செய்ய 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
• சோயா, கௌப்பி, பாசிப்பயறு, உளுந்து, மிளகாய், உருளைக்கிழங்கு போன்ற தானிய விளைச்சல்களுக்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
• பாவனையின்றி இருக்கும் காணிகளின் மீள் அபிவிருத்திக்கான ஆரம்ப கட்டச் செயற்பாடுகளுக்காக 250 மில்லியன் ருபாய் ஒதுக்கீடு.
• இராஜாங்கனை, கல்லோயா, மின்னேரியா, உருவெல நீர்தேக்கங்களின் மீள் அபிவிருத்திக்காக 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
o வரவு செலவு திட்டம் 2025 :- தென்னை பயிர்செய்கை அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
o வரவு செலவு திட்டம் 2025 :- கருவா உள்ளிட்ட ஏனைய ஏற்றுமதி பயிர்களுக்கான சந்தை அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
o வரவு செலவு திட்டம் 2025 :- அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான ஒதுக்கீடு 232.5 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு.
o வரவு செலவு திட்டம் 2025 :- சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 7500 ரூபாவிலிருந்து 10,000 ரூபா வரை அதிகரிப்பு.
o வரவு செலவு திட்டம் 2025 :- முதியவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை 3000 ரூபாவிலிருந்து 5000 ரூபா வரையில் அதிகரிப்பு.
o வரவு செலவு திட்டம் 2025 :- ஆதரவின்றி இருக்கும் சிறுவர்களுக்கு 5000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க தீர்மானம். 2000 ரூபாவை அவர்களின் வங்கி கணக்கில் வைப்பிலிடவும் தீர்மானம் – இந்த வேலைத்திட்டத்துக்காக் 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
o வரவு செலவு திட்டம் 2025 :- ஆதரவின்றி இருக்கும் சிறுவர்கள் திருமணம் செய்யும்போது அவர்களுக்கான வீட்டை நிர்மாணித்துக்கொள்வதற்காக ஒரு மில்லியன் ரூபா வழங்க திட்டம் – 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு..
o வரவு செலவு திட்டம் 2025 :- இயற்கை அனர்த்தங்கள் மற்றும் விலங்குகளினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் உடல் உபாதைகளுக்காக வழங்கப்படும் நிவாரண தொகை 10 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பு.
o வரவு செலவு திட்டம் 2025 :- புத்தாண்டு காலப்பகுதியில் லங்கா சதொச நிறுவனத்தினூடாக விசேட உணவு பொதியை வழங்குவதற்காக 1000 மில்லியன் ரூபா ஒருக்கீடு.
o வரவு செலவு திட்டம் 2025 :- சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்பிலுள்ள ஒரு மில்லியன் ரூபாவுக்கு,சந்தையிலுள்ள வட்டி வீதங்களை விட 3 சதவீத வட்டி வீதம் வழங்கத் திட்டம் ஜூலை முதல் அமுலாகும்.
o வரவு செலவு திட்டம் 2025 :- கொழும்பு நகருக்கு உள்நுழையும் பிரதான வீதிகளினூடாக 100 சொகுசு பஸ்களை சேவையில் ஈடுபடுத்தத் திட்டம். ( கொட்டாவ – கொழும்பு, மொறட்டுவ – கொழும்பு, வத்தளை – கொழும்பு, கடவத்த – கொழும்பு) – 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
o வரவு செலவு திட்டம் 2025 :- இலங்கை போக்குவரத்துச் சபையினூடாக 200 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தத் திட்டம்.
o வரவு செலவு திட்டம் 2025 :- புகையிரத சேவை வினைத்திறனை அபிவிருத்தி செய்வதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
o வரவு செலவு திட்டம் 2025 :- புதிய புகையிரத நிலையங்களை உருவாக்கும் வேலைத்திட்டத்துக்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
o வரவு செலவு திட்டம் 2025 :- தம்புத்தேகம புகையிரத நிலையத்தை புனரமைப்பு செய்வதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகளுக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
o வரவு செலவு திட்டம் 2025 :- ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் கடனை மீள் செலுத்துவதற்கான இடைக்கால செயற்பாடுகளுக்காக 20,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
o வரவு செலவு திட்டம் 2025 :- கிராமிய வீதிகளின் அபிவிருத்தி மற்றும் புனரமைப்புக்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
o வரவு செலவு திட்டம் 2025 :- கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்ய 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
o வரவு செலவு திட்டம் 2025 :- வடக்கு மாகாணங்களிலுள்ள கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைத்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
o வரவு செலவு திட்டம் 2025 :- மாவட்ட மட்டத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக மேலதிகமாக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
o வரவு செலவு திட்டம் 2025 :- இந்திய நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில் பரந்துப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்த யோசனை.
o வரவு செலவு திட்டம் 2025 :- மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்தாரத்தை மேம்படுத்துவதற்காக 7583 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
o வரவு செலவு திட்டம் 2025 :- பெருந்தோட்ட வீட்டு அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்திக்காக 4267 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
o வரவு செலவு திட்டம் 2025 :- மலையக தமிழ் இளைஞர்களின் தொழில் பயிற்சி, வாழ்வாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்திக்காக 2450 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
o வரவு செலவு திட்டம் 2025 :- மலையக தமிழ் மாணவர்களுக்கான பாடசாலை மற்றும் நவீன வகுப்புகளுக்காக 866 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
o வரவு செலவு திட்டம் 2025 :- பரந்தனில் இரசாயன உற்பத்திக்கென தனியான தொழில்துறை வலயத்தை அமைக்க யோசனை.
o வரவு செலவு திட்டம் 2025 :- காலி பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டு செயலிழந்துள்ள தொழில் பூங்காவாக டெக்னோ பார்க்கை அபிவிருத்தி செய்ய 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
o வரவு செலவு திட்டம் 2025 :- மோட்டார் வாகன உதிரிபாகங்கள் மற்றும் இறப்பர் உற்பத்திக்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
o வரவு செலவு திட்டம் 2025 :- கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்துக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

