35 வயதுப் பெண் சடலமாக மீட்பு; குற்றத்தடயவியல் பொலிஸார் விசாரணை – சம்மாந்துறையில் சம்பவம்.!!!
-தில்சாத் பர்வீஸ்-
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையடிக்கிராமம் 02 பகுதியில் 35 வயதுடைய பெண்ணொருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இஸ்மாயில் ரிஸ்வானா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், அவர் கடந்த 20 வருடங்களாக மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நூர்டீன் சர்ஜூனின் உத்தரவுக்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்துக்குச் சென்று மரண விசாரணைகளை முன்னெடுத்தார். இதன்போது, அம்பாறை குற்றவியல் தடயவியல் பிரிவு பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, உயிரிழந்த பெண்ணின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

