சட்டவிரோதமாக 117 ஆமை முட்டைகளை வைத்திருந்த – 57 வயது நபர் கைது.!!!
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
திருகோணமலை கல்லடிச்சேனை கடற்கரைப் பகுதியில் கடந்த (28) இலங்கை கடற்படை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக ஆமை முட்டைகளை வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.
கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படை கப்பல் லங்காபட்டுன மேற்கொண்ட இந்த விசேட நடவடிக்கையில், கடற்கரையிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 117 ஆமை முட்டைகள் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றுடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், திருகோணமலை தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், கைப்பற்றப்பட்ட ஆமை முட்டைகளும், சந்தேக நபரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சேருநுவர வனவிலங்கு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

