உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 9, 2026

Hot News

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

கடலில் இறங்கிய 66 வயது நபர் உயிரிழப்பு; மருதமுனை கரையொதுங்கிய சடலத்தால் பரபரப்பு.!!!

-பாறுக் ஷிஹான், தில்சாத் பர்வீஸ்-

மருதமுனை கடற்கரை ஓரத்தில் வெள்ளிக்கிழமை (09) மாலை 66 வயதுடைய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பெரியநீலாவணைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாண்டிருப்பு – 02, கிருஷ்ணா வீதியைச் சேர்ந்த ஆறுமுகம் கிருபாகரன்   என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

குறித்த நபர் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.40 மணியளவில் பாண்டிருப்பு – 02 விஷ்ணு கோவிலுக்கு அருகாமையிலுள்ள கடற்கரைப் பகுதிக்குக் குளிப்பதற்காகச் சென்றுள்ளார். இதன்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் பலனாக, சுமார் மாலை 5.20 மணியளவில் மருதமுனை கடற்கரைப் பகுதியில் அவரது சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது.

குறித்த நபர் அதிகளவு குடிபோதையிலேயே கடலில் குளிப்பதற்காகச் சென்றுள்ளதாகவும், அதனாலேயே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப்பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.கஜேந்திரன்  தலைமையில் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1218083

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time