உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 26, 2026

Hot News

IMG-20261123-WA0059
ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கை: போராட்டத்தால் தீர்வா.??? பேச்சுவார்த்தையால் தீர்வா.???
IMG-20261115-WA0011
2027 வரவு–செலவுத் திட்டம்: அபிவிருத்திக்கான புதிய பாதையா? மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா?

Share :

படகில் கடத்தப்பட்ட 673 கடல் அட்டைகள் சிக்கின; 3 சந்தேகநபர்கள் கைது.!!!

-கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்-

குடாரப்பு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடல் நடவடிக்கையில் ஈடுபட்டு, கடல் அட்டைகளை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2026 செப்டம்பர் 5ஆம் திகதி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி கடற்படை நிறுவனத்தினால் குடாரப்பு கடற்கரைப் பகுதியை அண்மித்த கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று சோதனையிடப்பட்டது.

இதன்போது, சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடல் நடவடிக்கையில் ஈடுபட்டு, கரைக்கு கடத்திச் செல்லப்பட்ட 673 கடல் அட்டைகள், ஒரு படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 51 முதல் 56 வயதுக்குட்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள், கடல் அட்டைகள், படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1361371

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time