உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

100 ரூபா குடிநீர் போத்தல் 130 ரூபாவுக்கு விற்பனை; உணவகத்திற்கு 7.5 இலட்சம் ரூபா அபராதம்.!!!

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையைவிட அதிக விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்த வாழைச்சேனை உணவகத்திற்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 4ஆம் திகதி மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, குறித்த உணவகத்தில் அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபா எனக் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு லீற்றர் குடிநீர் போத்தல் 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உணவக நிர்வாகத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு வியாழக்கிழமை (10) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றஞ்சாட்டப்பட்ட உணவக நிர்வாகம் குற்றத்தை ஒப்புக்கொண்டது.

இதனையடுத்து, வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் குறித்த உணவகத்திற்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பான தகவல்கள் இருப்பின், அலுவலக நேரங்களில் 1977 என்ற துரித இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215571

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time