உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

ஆட்சி அமைக்கும் முனைப்புடன்; தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச சபைக்கு 32 உறுப்பினர்கள் இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் எந்த ஒரு தனிக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் தலா 10 ஆசனங்களை பெற்றுள்ள நிலையில் ஏனைய சிறு கட்சிகளின் ஆசனங்கள் சமமாக கூட்டு சேரும் பட்சத்தில் 16 க்கு 16 என்ற அடிப்படையில் சமனாக காணப்படும் நிலையில் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகள் திருவுல சீட்டு அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.

இதன்படி தேசிய மக்கள் சக்தி 08 வட்டாரங்களில் வெற்றி பெற்று இரு இரட்டை உறுப்பினர் வட்டாரங்கள் உள்ளடங்களாக( 16709 வாக்குகள்) 10 உறுப்பினர்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 06 வட்டாரங்களில் வெற்றி பெற்று ( 18114 வாக்குகள்) 04 போனஸ் உறுப்பினர்களுடன் 10 உறுப்பினர்களையும் இலங்கை பொதுஜன பெரமுன ஒரு வட்டாரத்தில் வெற்றி பெற்று 02 போனஸ் உறுப்பினர்களுடன் (4807 வாக்குகள்) 03 உறுப்பினர்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு வட்டாரங்களில் வெற்றி பெற்று ( 4161 வாக்குகள்) 02 உறுப்பினர்களையும் பொதுஜன ஐக்கிய முன்னணி ( 2527 வாக்குகள்) 02 போனஸ் உறுப்பினர்களையும் சர்வஜன அதிகாரம் ( 3003 வாக்குகள்) 02 போனஸ் உறுப்பினர்களையும் ஐக்கிய தேசிய கட்சி ( 1939 வாக்குகள்) 01 போனஸ் உறுப்பினரையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ( 1443 வாக்குகள்) 01 போனஸ் உறுப்பினரையும் சுயேட்சை குழு ( 2011 வாக்குகள்) 01 போனஸ் உறுப்பினரையும் பெற்றுள்ளது.

இவ்வாறான நிலையில் தேசிய மக்கள் சக்தி யும் ஐக்கிய மக்கள் சக்தி யும் ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுவரும் நிலையில் மக்களின் எதிர்பார்ப்பு ஆளும் அரச தரப்பினர் ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்ற நிலையே காணப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 720193

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time