உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் விபத்து; ஐவர் காயம்.!!!

(எஸ்.எம்.எம். முர்ஷித்)

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள கிரான் பிரதேசத்தில் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.

கல்முனை பகுதியிலிருந்து கண்டி திசையை நோக்கிச் சென்ற காரும் வாழைச்சேனை பகுதியில் இருந்து கிரான் திசையை நோக்கிச் சென்ற சிறிய எல்ப்ரக் வாகனம் நேருக்கு நேர் மோதிய சந்தர்ப்பத்தில், அப்பகுதியில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் இருந்தவர்கள் உட்பட மொத்தம் ஐந்து பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன், அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 933498

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time