உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து: 75 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி; சாரதி காயம்.!!!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, கரோலினா பகுதியில் நேற்று (15) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 75 அடி ஆழமான பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தலவாக்கலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நிகழ்ந்த வேளையில், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த ஒருவர் முச்சக்கரவண்டியில் பயணித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்த சாரதி உடனடியாக வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

– மஸ்கெலியா நிருபர் செ.தி. பெருமாள்

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066861

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time