உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

அரசாங்க செயல்பாடுகளை பாராட்டிய: கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற்சங்கம்.!!!

-பாறுக் ஷிஹான்-

அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாராட்டுவதுடன் இலஞ்சம் ஊழல் என்பவற்றை தடுப்பதற்கு முன்னுரிமை வழங்குங்கள் என இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தொழில் ரீதியாக தகுதிவாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற் சங்கம் மே தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு கல்முனை மயோன் பிளாஸா மண்டபத்தில் அதன் தலைவர்  தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அண்மையில் மரணமடைந்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களை நினைவு கூர்ந்து 2 நிமிடம் மௌன பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்ட பின்னர்  சங்கத்தின் பொதுச் செயலாளர் எம். ஹூஸைன் முபாறக், உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் சார்பான 18 கோரிக்கைகளை முன்மொழிந்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது குறித்த பட்டதாரிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள், அவற்றை மையப்படுத்தி அவர்கள் வேண்டி நிற்கும் தீர்வுகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். இந்நிகழ்வின் ஓர் அம்சமாக சிரேஸ்ட  ஊடகவியலாளர்களான இ.கோபாலசிங்கம் மற்றும் ஏ.எஸ்.எம். முஜாஹீத் ஆகியோரின்  ஊடக சேவைக்காக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் இத்தொழிற் சங்கத்தின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 811098

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time