உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான உயர் தர வகுப்புகள் மார்ச் 25க்கு பின்னரே – கல்முனை மாநகர சபை கடும் அறிவுறுத்தல்.!!!

(அஸ்லம் எஸ்.மெளலானா & பாறுக் ஷிஹான்)

இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான க.பொ.த. உயர் தர புதிய வகுப்புகள் யாவும் எதிர்வரும் மார்ச்-25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கல்முனை மாநகர சபை ஆட்புல எல்லையினுள் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கு கல்முனை மாநகர சபை கண்டிப்பான அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

பெற்றோர்கள் மற்றும் பொது நல அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த மாணவர்களின் நலன் கருதி இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்கள் தெரிவித்துள்ளார்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிந்த கையோடு உடனடியாகவே க.பொ.த. உயர் தரத்திற்கான புதிய வகுப்புகளை ஆரம்பிக்க சில தனியார் கல்வி நிலையங்கள் ஏட்டிக்குப் போட்டியாக முனைவதாக, முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இது விடயமாக ஏலவே சொல்லப்பட்ட ஆலோசனைகளை குறித்த கல்வி நிலையங்கள் பொருட்படுத்தாமல், உதாசீனமாக செயற்படுவதானது கவலைக்குரிய விடயமாகும்.

ஆகையினால் இந்த விடயத்தில் கல்முனை மாநகர சபையானது இவ்வறிவுறுத்தலை விடுப்பதுடன் இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 871252

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time