அக்குரேகொட துப்பாக்கிச் சூடு: சந்தேக வாகனம் பத்தேகமவில் எரிந்த நிலையில் மீட்பு.!!!
அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் கார், பத்தேகம பகுதியில் எரிந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் வாகனமே இதுவாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வாகனம் தற்போது மேலதிக பரிசோதனைக்காக பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குறித்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் EP–KI 7738 என்ற இலக்கத் தகடு கொட்டாவை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மேலதிக தடயங்களைச் சேகரித்து வரும் பொலிஸார், சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ளனர். சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


